மறுபடியும் ஆரம்பிக்கலாமா? காப்பி டம்பளர்
The only flower known to have wings is the butterfly; all others stand helpless before the destroyer.
வாழ்க்கையின் ஏடுகளைத் திரும்பிப் புரட்டுகையில் அத்தனையும் எப்படியோ குற்றப் பத்திரிகையாகவே படிக்கின்றன. கோட்டைவிட்ட சந்தர்ப்பங்கள், அவசரப்பட்டுவிட்ட ஆத்திரங்கள், மீள முடியாத பாதைகள், அசலுக்கும் போலிக்கும் இனம் தெரியாது ஏமாந்த லேவாதேவிகள், இனாமுக்கு ஆசைப்பட்டு முதலே பறிபோன இழப்புகள், கண் கெட்டபின் விழுந்து விழுந்து சூர்ய நமஸ்காரங்கள் - ஏற்றலும் தாழ்த்தலுமாய் ஓயாத பழங்கணக்கு, அத்தனையும் தப்புக் கணக்கு. ஆத்திரத்தில் ஸ்லேட்டைக் கீழே போட்டு உடைத்தால் அவ்வளவு தான்; உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா.
உண்மை, தெய்வம், விடுதலை என்கிற பெயரில் ஏதோ மாயா சத்யத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்புவதும் வாழ்வதும் என்னவோ வாசனைகள், பிம்பங்கள், நினைவுகள், கனவுகள் என்னும் சத்ய மாயையில் தான் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடித்தாலும் இருப்பதை மறுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நிழல்களில் தெளிந்த நிழல்தான் மனம், உணர்வு, புத்தி, ஞானம், தரிசனம், உண்மை, தெய்வம், முக்தி என்று இந்த அனுமான நிலைக்கு என்னென்ன பேர்கள் உண்டோ அவை அத்தனையும். அப்பவும் அந்தத் தெளிந்த நிலையும் ஒரு தெளிந்த நிழலன்றி வேறில்லை என்று என்ன நிச்சயம்?”
[…]வாழ்க்கையின் திருப்பங்கள் எல்லாம் அனேகமாய் [இம்மாதிரி] கடிவாளம் தெரித்த சமயங்கள்தான்.
"
i will continue to reblog this until it gets the notes it deserves because elephants
If your heart isn’t melting it’s because you don’t have one.
it WaVED
omg aw
(Source: hempura, via ethirvinai)
அடுத்த வருடமாவது
யோக்கியப் பட்டம்
வாங்கிவிடவேண்டும்
காலையில் பார்த்த
எருமைமாட்டிடம்
அது எப்படி ஒரு
அயோக்கியனாக
இருக்கிறது என்பதை
நிரூபித்தாயிற்று
நாளை வேறொரு மாடு
இன்று வெளிவரும் புத்தகங்களில் சித்த வைத்தியம், சோதிடம், சிற்றின்பம் பற்றியவை தவிர மற்றவெல்லாம் தம்மை ஒரு இலக்கிய மைல்கல் என மார்தட்டிக் கொண்டு வருகின்றன. நல்ல இலக்கியம் என்றால் எத்தனை நந்திகள் வழிமறித்துப் படுத்துக் கொண்டாலும், அவை உரிய ஸ்தானத்தை அடைந்தே தீரும். பனைமரத்தில் ஊசியைச் சொருகிக் கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குருவின் சீடர்கள் போல, எத்தனை பேர் சுமந்து வந்தாலும் பரங்கிக்காய் குதிரை முட்டையாகிவிடாது.